• Thu. Apr 18th, 2024

2021 இல் கவனத்தை வெல்லும் நடுத்தர வகை ஸ்மார்ட்போன்கள் Huawei Nova 7 SE, Huawei Y7a

ByAuthor

Dec 26, 2020

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei 2020ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில், பல்வேறு அம்சம் நிறைந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தது. Huawei Nova 7 SE மற்றும் Y7a ஆகிய குறித்த இரு கையடக்கத் தொலைபேசிகளும் அறிமுகமானதைத் தொடர்ந்து தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறியதுடன், அவை இரண்டும் 2020 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஆட்சி செய்யும் Nova மற்றும் Y குடும்பத்தின் மரபு வழி தொலைபேசிகளாகும். விலைக்கேற்ற மதிப்பை வழங்கும் இந்த இரு கையடக்க தொலைபேசிகளும், குறுகிய கால இடைவெளியில் சாதனை விற்பனையை கடந்துள்ளதோடு, 2021 மலர்ந்த நிலையிலும் தொடர்ந்தும் மிகவும் விரும்பப்படும் கையடக்கத் தொலைபேசிகளாக தொடர்கிறது.

Huawei Nova 7 SE உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது நடுத்தர வகை 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியாகும். சிறந்த விற்பனையைக் கொண்டுள்ள Nova தொடரின் புதிதாக இணைந்த கையடக்கத் தொலைபேசி எனும் வகையில் Nova 7 SE ஆனது ஏற்கனவே பிரபல்ய வெற்றியை கடந்துள்ளது. அதன் மிகவும் மேம்பட்ட மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய விடயங்கள் மூலம் அதனுடனான போட்டியாளர்களான ஸ்மார்ட்போன்களில் வலுவான போட்டியாளராக மாறியுள்ளன.

Nova 7 SE 6.5 அங்குல செல்ஃபி கெமராவுக்கான சிறு துளையுடனான முழுத் திரையையும் (punch full view display) அது கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பெரிய திரையில் திரைப்படங்களைப் பார்க்கவும், கேம்களை விளையாடவும் முடிகிறது. இளைஞர்களிடையே அதிக கேள்வியாக அமைந்துள்ள அதன் கண்கவர் வடிவமைப்பு அதிலுள்ள முக்கிய அம்சமாகும். Space Silver, Crush Green and Midsummer Purple, Nova 7 SE (வெள்ளி, பச்சை, ஊதா) போன்ற மூன்று தனித்துவமான வண்ணங்களில் அது கிடைக்கிறது. Nova 7 SE இனை வைத்திருப்பதானது, ஒருவரின் உள்ளங் கைக்கு எட்டிய விருந்தாகும்.

அதன் குவாட் கெமரா அமைப்பானது, அதிகம் பேசப்படும் அம்சமாகும். அதன் கெமரா அமைப்பானது 64MP அல்ட்ரா உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP பொக்கே லென்ஸ் மற்றும் 2MP மெக்ரோ லென்ஸ் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நான்கு லென்ஸ்களின் கலவையானது அடுத்த நிலை புகைப்பட அனுபவத்தை தருகின்ற அதே நேரத்தில் 4K  High Definition வீடியோ, DUAL VIEW வீடியோ, சுப்பர் ஸ்லோ மோஷன் (Super slow motion சலன அசைவு), Time lapse போன்றன, கையடக்கத் தொலைபேசி வீடியோ பதிவிற்கு புதிய பரிமாணத்தைக் கொண்டு வருகின்றன. இதன் 16MP செல்ஃபி கெமரா ஆனது ‘Super Night Mode’ (சுப்பர் நைட் பயன்முறை’) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. கெமராவினுள் உள்ளமைக்கப்பட்ட AI நுண்ணறிவு மாற்றியமைத்தல் (editing) செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் சிறந்த வெளியீட்டை உடனடியாகப் பெற உதவியளிக்கிறது.

சிறந்த திறன் கொண்ட Kirin 820 SoC Chip இனால் இயக்கப்படும், Nova 7 SE ஆனது அதிக செயற்றிறன் அவசியமான பிரபலமான விளையாட்டுகளை விளையாடும்போதும், திரைப்படங்களைப் பார்க்கும்போதும், இணையத்தில் உலாவும்போது பின்னடைவு இல்லாத செயற்றிறனை உறுதிப்படுத்துகிறது. இதன் 8GB RAM அதன் மிக விரைவான செயல்திறன் மட்டத்தை சான்று பகிர்வதோடு, 128GB சேமிப்பகம் ஆனது, பயனர்கள் எப்போதும் விரும்பும் வகையில் தங்களது அனைத்து வீடியோக்கள், புகைப்படங்கள், விளையாட்டுகள், செயலிகள், கோப்புகளை சேமிக்க உதவியளிக்கிழறது. Nova 7 SE 4,000 mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதோடு, இது அனைத்து ஸ்மார்ட்போன் பணிகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ள உதவுகிறது. இது தவிர, Huawei Super Charge தொழில்நுட்பத்தத்தையம் கொண்டுள்ளது. இதன் மின்கலம் 30 நிமிடங்களுக்குள் 70% வரை சார்ஜ் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

Huawei Y7a ஆனது Huawei பயனர்களிடையே மற்றொரு நடுத்தர வகை தெரிவாக அமைவதோடு, அதன் மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக 6.67 அங்குல பெரிய திரை அமைகின்றது. இது ஒரு ஸ்மார்ட்போன் அதன் விலை வரம்பிற்குள் கிடைக்கக் கூடிய ஓர் அரிய அம்சமாகும். வழக்கம் போல், அதன் கெமரா அமைப்பானது ஒரு குவாட் கெமராவை கொண்டுள்ளது. அதாவது, 48MP உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP ஆழத்திற்கான (depth) லென்ஸ்> 2MP மெக்ரோ கெமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கெமரா கலவையானது பகலோ, இரவோ என்பதைப் பொருட்படுத்தாது, அதன் AI நுண்ணறிவு மூலம் ஆச்சரியமூட்டும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உருவாக்குகிறது.

Huawei Y7a ஆனது Kirin 710 Chip மற்றும் 4GB RAM மூலம் இயக்கப்படுவதோடு, இது ஒரு அதிவேக செயற்றிறனைக் வழங்குவதோடு, குறிப்பாக கேமிங், இணைய வீடியோக்களை பார்த்தல், இணைய உலாவல் போன்ற அதிக செயற்பாடுகளுக்கு உதவுகிறது. அதன் 5,000 mAH பெரிய மின்கலத்தை பல பயனர்கள் விரும்புவதோடு, அது தொடர்ச்சியான பயன்பாட்டிலும் கூட ஓரிரு நாட்களுக்கு நீடிப்பதாக அமைகின்றது. இதில் காணப்படும் மற்றுமொரு முக்கிய கவரும் அம்சமானது, அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை வழி திரையை திறக்கும் (Fingerprint) பொத்தானாகும். இது மிகவும் வசதியானதும் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அரிதாகக் காணப்படும் அம்சமாகவும் அமைகின்றது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் உயர்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களின், நடுத்தர வகை விலை வரம்பிற்குள் அமைந்த தெரிவாக இவை இரண்டையும் விரும்புகின்றனர். Huawei தரக்குறியீட்டின் மீது அதன் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுவூட்டும் வகையில் Huawei Nova 7 SE மற்றும் Y7a பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பணத்திற்கான பெறுமதியைக் கொண்ட, தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் Huawei நிறுவனம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *