• Tue. Apr 16th, 2024

GT Master பதிப்பு தொடர் உள்ளிட்ட தயாரிப்புகளின் வரிசைகளை ஓகஸ்ட் 18 அறிமுகப்படுத்தும் realme

ByAuthor

Aug 17, 2021

100 மில்லியன் விற்பனை மைல்கல் கொண்டாட்டம்

ஓகஸ்ட் 10, 2021 – கொழும்பு, இலங்கை: realme தனது 100 மில்லியன் விற்பனை சாதனை மைல்கல் வெற்றியினை நினைவுகூரும் வகையில் realme GT Master Series உள்ளிட்ட புதிய தயாரிப்பு வரிகளை ஓகஸ்ட் 18ஆம் திகதி வெளியிடுகிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளதை உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளது. realme, இந்த சாதனை இலக்கை 37 மாதங்களுக்குள் எட்டியுள்ளது. இதன் மூலம் 100 மில்லியன் விற்பனையை கடந்த உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் தரக்குறியீடு எனும் பெயரை realme தனதாக்கியுள்ளது.

realme GT Master பதிப்புத் தொடரானது,  அதன் மிக உயர் வகை தனித்துவ சாதன பட்டியலில் உள்ளடங்குகின்றது, பிரபல ஜப்பானிய தொழில்துறை வடிவமைப்பாளர் நவோட்டோ புகாசாவா (Naoto Fukasawa) இனால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் புதிய ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளில் கைதேர்ந்தவர்.

ஸ்மார்ட்போன்களைத் தவிர, TechLife (தொழில்நுட்ப வாழ்க்கைமுறை) தொகுதியை உள்ளடக்கிய ஏனைய பல அம்சங்களையும் realme இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் தரக்குறியீடு எனும் வகையிலும் தொழிற்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் மனதில் கொண்டு அது தனது புதிய தயாரிப்பு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அத்துடன், கடந்த மூன்று வருடங்களில் அதன் 100 மில்லியன் பயனர்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாபெரும் சலுகைகளை realme இந்நிகழ்வில் அறிவிக்கவுள்ளது. இச்சலுகைகள் 61 சந்தைகளில், அதன் அனைத்து தயாரிப்பு வகைகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளன.

இவ்வெளியீட்டு நிகழ்வானது ஒன்லைனில் நேரலையாக YouTube, Twitter, Facebook ஆகிய தளங்களில் realme இனது உத்தியோகபூர்வ பக்கங்களில் ஒளிபரப்பப்படவுள்ளன. நிகழ்விற்காக காத்திருங்கள்!

* தரவு மூலங்கள்: Counterpoint, Strategy Analytics, Canalys இனது 2021 இரண்டாம் காலாண்டு ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அறிக்கை

* தரவு மூலங்கள்: மூலோபாய பகுப்பாய்வுகள்: 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த வேகமான தரக்குறியீடு realme

மேலதிக தகவல்களுக்கு: www.realme.com இற்குச் செல்லவும்.

realme பற்றி:

realme ஆனது வளர்ந்து வரும்  உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது புதிய தொழில்நுட்பங்களை மிக இலகுவாக அடையும் வகையிலான உற்பத்திகளை வழங்கி, ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு அவசிமான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உயர்ந்த அம்சங்களை உள்ளடக்கியவாறு, காலத்திற்கு ஏற்ற போக்கில், சிறப்பான வடிவமைப்புகளுடன், இளம் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறது.

2018 ஆம் ஆண்டில் Sky Li இனால் நிறுவப்பட்டு, அதன் “Dare to Leap” (முன்னேற பயமில்லை) எனும் உயிர் நாடிக்கு ஏற்ப, realme ஆனது, உலகின் 7ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. 2021 இன் இரண்டாம் காலாண்டு நிலவரப்படி, உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவலுக்கு, www.realme.com இனைப் பார்வையிடவும்.

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *