இலங்கையில் 3 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் vivo

Author
Author

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான vivo, இலங்கையில் இன்று தனது 3ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுவதுடன், இது இலங்கையிலுள்ள இளையோருக்கான ஸ்மார்ட் சிறப்பம்சங்களுடான தொழில்நுட்ப புத்தாக்கத்தில் புதிய சாதனையையும் குறிக்கின்றது. இந்த வர்த்தகநாமம், உள்ளூர் சந்தையில் நுழைந்ததிலிருந்து, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்தை வலுவாகக் கடைப்பிடித்து வருகிறது. மேலும், உலகளாவிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த தரமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை ஆவலுடன் பூர்த்தி செய்து வருகிறது. விலையில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம் ‘அதிகப்படியான உள்ளூர், அதிகப்படியான உலகளாவிய’ முயற்சியில் தனது தடத்தை தொடர்ந்து வளர்த்து வருவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் செலவீனங்களைக் குறைக்காமல் சிறந்த தீர்வுகளை அணுக முடியும்.

வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பிலான ஆழமான நுண்ணறிவுகளை விற்பனை பங்காளர்களிடம் இருந்து அவ்வப்போது பெறுதல்  மற்றும் தீவிர சந்தை ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் vivo ஏனையோரிடமிருந்து தனித்து நிற்கிறது. அதன் இரண்டு பிரத்தியேக சேவை நிலையங்கள் மற்றும் 1200+ க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்ட வலையமைப்பு ஆகியவற்றுடன் vivo, வலுவூட்டல் மற்றும் இளைஞர்களிடையே திருப்தியை உறுதி செய்வதற்காக முதற்தர விற்பனைக்குப் பின்னரான சேவையை வழங்க எதிர்ப்பார்க்கின்றது.

vivo தன்னை ஒரு இளைஞர்களை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமாக நிலைநிறுத்தியுள்ளது – இலங்கை இளைஞர்களின் வளர்ந்து வரும் வாழ்க்கை முறை தேவைகள் மற்றும் பட்ஜெட் விருப்பங்களுக்கு ஏற்ப – மிகச் சிறந்த கெமரா அம்சங்கள், கேமிங் அனுபவம் மற்றும் மின்கல ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதற்கு இணங்க, vivo இந்த ஆண்டு சிறப்பம்சங்களால் நிரம்பிய Y series மற்றும் S series இனை வெளியிட்டது. இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை, முதன்மை தயாரிப்புகளான V19 மற்றும் V20 ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது, இவை இந்தப் பிரிவில் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் கூர்மையான அழகியல் அம்சங்களை நுகர்வோருக்கு கொண்டு வருகின்றன.

அதன் தொலை நோக்குப் பார்வையால் வழிநடாத்தப்படும் இந்த வர்த்தகநாமமானது உலகளாவிய 5G துறையில் ஒரு வலுவான நிலையை அடைவதற்கு ஒரு தனித்துவமான கௌரவத்தைக் கொண்டுள்ளது. 5G மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கலவையை vivo கொண்டு வருகிறது. எதிர்கால தொழில்நுட்பங்களுடன் கூடிய 5G மற்றும் 5G உட்பொதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், சிறந்தவற்றைப் பெற தகுதி வாய்ந்த நுகர்வோருக்கு முக்கிய போக்கு என்பதை நிரூபிக்கும். தனித்துவமான 5G-ready ஸ்மார்ட்போனான – IQOO Pro 5G, vivoவின் சகோதர நிறுவனத்தால் பாவனையாளர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. vivo SL அதன் ஸ்மார்ட் தயாரிப்புகளில் 5G தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த சிறந்த தயார் நிலையில் உள்ளது, மேலும் 5G உட்பொதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி அல்லது பயன்படுத்த சுவாரஸ்யமாக இருக்கும் அதேவேளை சிறப்பாக வடிவமைக்கப்படும் ‘நுண்ணறிவு கொண்ட போன்களை நோக்கி செயற்பட்டு வருகின்றது.

ஓகஸ்ட் மாதத்தில் நிறுவனம் ஒரு புதிய இடத்திற்கு மாறியது, இது இலங்கையில் அதன் நேர்த்தியான வளர்ச்சியைக் காட்டுகின்றது.

vivo அதன் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவோடு நீண்ட தூரம் வந்துள்ளது. இந்த வர்த்தகநாமம் இலங்கையில் Abans (தேசிய விநியோகஸ்தர்), Dialog Axiata மற்றும் Singhagiri ( கார்பரேட் பங்குதாரர்கள்) ஆகியோருடன் ஒரு நெகிழ்ச்சியான பங்குடமையை பகிர்ந்து கொள்வதுடன், இந்த பயணத்தின் ஒரு முக்கிய பங்காக இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. vivo தொடர்ந்து ஒரு சிறந்த தொழில்நுட்ப அனுபவத்தைக் கொண்டு வந்து நுகர்வோருக்கு மிகவும் முற்போக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும்.

அவர்கள் 420+ vivo ஊழியர்களையும் 1200+ விற்பனையாளர்களையும் ஒன்றிணைத்து நுகர்வோருக்கு வழிகாட்டவும் செய்தனர், மேலும் உணர்வை உருவாக்கினர். தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை வளமாக்கி, ஒருவருக்கொருவர் நெருக்கமாக கொண்டு வரப்பட வேண்டும் என்று இந்த வர்த்தகநாமம் நம்புகிறது.

பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகள் மூலம் 2020,  vivo Sri Lanka  விற்கு எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்த ஆண்டாக அமைந்துள்ளது. விற்பனைக்கு பின்னரான சேவைகள் மூலம் புறநகர் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு உதவும் பொருட்டு 2020 மார்ச் மாதம் காலியில்  தனது இரண்டாவது சேவை நிலையத்தை vivo Sri Lanka ஸ்தாபித்தது. அதேபோல், இந்த  COVID-19 தொற்றுநோய் காலப்பகுதியில் இருந்து மீள அரசாங்கத்தின்  ‘Restart Sri Lanka’  முயற்சிகளுடனும்  கைகோர்த்தது. கொரோனாக்கு எதிராக போராடிய முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார துறைக்கு தனது பங்களிப்பாக 1 மில்லியன் முகக் கவசங்களை தனது சமூக பொறுப்புத் திட்டமான #vivocares இன் அங்கமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *