• Wed. Jul 24th, 2024

உயர் தரமான இலங்கை தரை ஓடுகளை நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்க உறுதியளிக்கும் Macktiles

ByAuthor

May 19, 2021

இலங்கை தரை ஓடுகள் தொழிற்துறையில் இளம் நிறுவனமான Macktiles, உள்நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை ஸ்தாபிப்பதன் மூலம் மேலும் விரிவாக்கல் முயற்சியை எடுத்துள்ளது. இது இலங்கையின் தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு இணையாக தொழிற்துறை விரிவாக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றது. இத்தாலியைச் சேர்ந்த உற்பத்தி ஜாம்பவானான உலகின் நம்பர் 1 தரை ஓடு உற்பத்தி விநியோகஸ்தரான SACMI  மற்றும் அமைப்புகளில் இருந்து ஒரு அதி நவீன தொழிற்சாலையில் இந் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

“எங்கள் புதிய ஆலை ஸ்தாபிக்கப்பட்டதும், சர்வதேச தரம் வாய்ந்த செரமிக் தரை ஓடுகள் மற்றும் அதி நவீன உயர் தரமான பீங்கான் பாத்திரங்களை எம்மால் விநியோகிக்கக் கூடியதாக இருக்கும். கடந்த காலத்தில் இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிசைனர் தரை ஓடுகளுக்கு இணையானதாக எங்கள் தரை ஓடுகள் இருக்கும்,” என உற்பத்தி தொழிற்சாலையின் தலைமை அதிகாரியான ரஞ்சித் முனமல்பே தெரிவிக்கின்றார். இவர் இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் சீனாவில் விரிவான தொழில் அனுபவமுள்ள தரை ஓடுகள் தொழில்நுட்ப வல்லுநராகும். “இலங்கை தரை ஓடு தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான சரியான சூழலைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு தரை ஓடு தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதில் ஓர் அங்கமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

“மேலும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கௌரவ. பஷில் ராஜபக்ஷ அவர்கள் முழுகெழும்பாகத் திகழும் மற்றும் அவர்களினால் ஆதரவளிக்கப்படும், மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சௌபாக்யே தெக்ம’ முயற்சியின் அங்கமாக இருப்பதில் பெருமையடைகின்றோம்,”என்றார்.

கைத்தொழில் அமைச்சர் கௌரவ. விமல் வீரவன்ச அவர்களிடமிருந்து நாம் பெறும் ஊக்கம் மற்றும் கைத்தொழில் அமைச்சு, செயலாளர், பணிப்பாளர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிற அலுவலர்களின் ஆதரவு எங்களைப் போன்ற தொழிலதிபர்களுக்கு நம் நாட்டில் தரை ஓடுகள் உற்பத்தி செய்வதில் தன்னிறைவு அடைய ஒரு உந்துதலாகும்,” என இன் பொது முகாமையாளர் தஜித பெரேரா தெரிவித்தார்.

“அனைத்து தரப்பையும் சேர்ந்த சக இலங்கையர்களின் கோரிக்கையையும்  பூர்த்தி செய்வதை உறுதி செய்வதும், அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு உயர்தர தரை ஓடுகளை தயாரிப்பதும் Macktiles இன் சிந்தனையாகும். இந்த நேரத்தில் உள்நாட்டு சந்தையில் தரை ஓடுகள் பற்றாக்குறை நிலவுவதுடன், எங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க எங்களது உயர்ந்த திறனில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  இத்தகைய சூழ்நிலையையும் மீறி நாங்கள் 2×2 தரை ஓட்டின் விலையை ரூபா 1500 – 2000 ஆக உயர்த்தவில்லை என்பதை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம், ஆனால் நாடு முழுவதும் உள்ள எங்கள் காட்சியறைகளில் ஆரம்ப விலையை VAT உட்பட ரூபா 695 / – ஆக நாங்கள் பேணுவோம்.

அளவின் வளர்ச்சியுடன், எதிர்காலத்தில் எங்கள் விரிவாக்கத்தின் காரணமாக குறைந்த தரை ஓடு விகிதத்தை சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கின்றோம்”, என விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிரோஷன் பனன்வல தெரிவித்தார்.

“தரை ஓடு மற்றும் குளியலறை உபகரண துறையில் இலங்கை முதலீட்டாளர்களால் பல புதிய முயற்சிகள் உருவாகின்றன என்பதையும் நாங்கள் அறிவோம். இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும், எதிர்காலத்தில், இலங்கை நுகர்வோருக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தரை ஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களின் தெரிவுகள் பரவலாக கிடைக்கும். அவ்வாறு செய்யும்போது, ​​இறக்குமதி செலவுகள் காரணமாக ரூபா 20 பில்லியனுக்கும் அதிகமான அந்நிய செலாவணி வெளியேற்றத்தை எமது நாடு சேமிக்கும். இந்த புதிய முயற்சிகள் சக இலங்கையர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ”என்று பிரதம செயற்பாட்டு அதிகாரி அஹமட் ஷாபி தெரிவித்தார். மேலும், தொழில்துறைக்கு இதுபோன்ற மகத்தான ஆதரவை வழங்கியமைக்காகவும், உள்ளூர் தொழிற்துறையை மேம்படுத்த தைரியமாக பில்லியன்களை முதலீடு செய்தமைக்காகவும் மேதகு ஜனாதிபதிக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

Macktiles, இலங்கையிலிருந்து இலங்கையர்களுக்கானது. எங்கள் அணுகுமுறையானது, உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான நோக்கத்தை அடைவதன் மூலம், இந்த உந்துதலில் முதலீடு செய்து முன்னிலைப்படுத்துவதன் மூலம் இந்தத் தொழிலில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் பயனடையச் செய்வதாகும். பிரத்தியேக வகை தரை ஓடுகளை வழங்கிய தரை ஓடுகளின் இறக்குமதியாளர்களும் இதில் அடங்குவதுடன் அவர்களின்  தரம் மற்றும் வடிவமைப்பு அளவுருக்களுக்கு பொருந்துவதன் மூலம் இந்த கேள்விகளை பூர்த்தி செய்வோம் என்று நாம் நம்புகிறோம். அவர்களின் OEM வர்த்தகநாமங்களின் கீழ், இது தொழில்துறையின் பங்குதாரர்களுக்கும், இலங்கையில் தற்போதுள்ள ஏனைய தரை ஓடு உற்பத்தியாளர்களுக்கும் ஒரு வெற்றிகரமான தளத்தை உருவாக்குவதுடன், உள்நாட்டு தரை ஓடு தொழிலுக்கு உற்சாகமூட்டும் பயணத்தை தொடர எதிர்பார்க்கிறோம்.

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *