ஒவ்வொரு Huawei Y7a கொள்வனவுடனும் 5GB இலவச மொபைல் கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் Huawei

Author
Author

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் தனித்துவமான ஸ்மார்ட்போன் வரிசைக்கு புகழ் பெற்றது, இது உலகம் முழுவதும் மிகவும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய டிஸ்ப்ளேக்களில் ஒன்றுடன் கூடிய Huawei Y7a, சிறப்பம்சங்கள் பலவற்றுடன் நிரம்பிய சாதனம் ஆகும். அதன் பெரிய திரை காரணமாக, சமூக ஊடக பயனர்கள் மற்றும் மொபைல் கேமர்களிடையே Huawei Y7a மிகவும் பிரபலமானது. Huawei Y7a ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ள போதிலும், இது தற்போது மலிவு விலையில் கிடைக்கிறது. அதன் மிக முக்கியமான சிறப்பம்சங்களில், 48MP Quad கெமரா அமைப்பு, 5000mAh அதிக வலுகொண்ட பற்றரி, 4GB RAM +128GB சேமிப்பகம் ஆகியன அதன் அதிக பிரபலத்திற்கு முக்கிய காரணங்கள்.

Huawei Y7a ஆனது, 6.67 அங்குல Full HD பெரிய திரையுடன், 90.3% திரைக்கு உடல் விகிதத்துடன்  பார்வைச்சிதறல் இல்லாத அனுபவத்தைக் கொண்டுவருகிறது. சாதனத்தின் வட்டமான மூலைகள் உள்ளங்கையில் பிடிப்பதை எளிதாக்குகிறது மற்றும் விளையாட்டுகளை விளையாடும்போது எளிதாக நெவிகேட் செய்யவும் உதவுகின்றது. Huawei Y7a ஆனது Crush Green, Blush Gold, Midnight Black வண்ணங்களில் கிடைக்கின்றது.

Huawei Y7a Quad camera அம்சத்தை கொண்டதாக காணப்படுகின்றது. Huawei Y7a Quad camera ஆனது, 48MP (f/1.8 குவியம்), 8MP (அல்ட்ரா-வைட் ஆங்கிள் வில்லை, f/2.4 குவியம்), 2MP (ஆழத்திற்கான வில்லை, f/2.4 குவியம்) மற்றும் 2MP உருப் பெருக்கி வில்லை, f/2.4 குவியம்) ஆகியவற்றை கொண்டுள்ளது. AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 48MP பிரதான கெமரா உயர்தர படங்களை பிடிக்கிறது மற்றும் பிற மூன்று கேமராக்களின் உதவியுடன், அதி-பரந்த, தெளிவான மற்றும் விரிவான படங்களை வழங்குகிறது.  Super Night mode அம்சத்தின் ஆதரவுடன், இரவு நேர புகைப்படம் எடுப்பதற்காக குறைந்த / மங்கலான ஒளி நிலைகளில் கூட இந்த பின்புற கெமரா சிறப்பாக செயற்படக் கூடியது. திரையில் ஒரு பஞ்ச் துளை வழியாக பொருத்தப்பட்டுள்ள  8MP செல்ஃபி கெமரா சமமாக சக்தி வாய்ந்தது மற்றும் பகலோ இரவோ தெளிவான படங்களை பிடிக்கிறது.

Huawei Y7a, Kirin 710A புரசசரைக் கொண்டுள்ளது. இது Y தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர செயல்திறனை வழங்குவதில் சிறந்தது. இதன் 4Gb RAM + 128GB சேமிப்பக கலவையானது ஒரு சிறந்த செயல்திறனை வழங்குகிறது, இது ஏனைய மத்திய ரக சாதனங்களுக்கு இணையாக உள்ளதுடன், பாவனையாளர்களுக்கு பலதரப்பட்ட மற்றும் அன்றாட நடவடிக்கைகளை எந்த பின்னடைவும் இல்லாமல் வசதியாக கையாள உதவுகிறது.

ஒரு பெரிய 5,000mAh பற்றரியினால் இயக்கப்படும் Huawei Y7a ஆனது, பாவனையாளர்கள் ஒரு தடவை சார்ஜ் செய்வதன் மூலம் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மின்சக்தி இன்றி செயலிழந்து போகாமல் தொடர்ந்து 2 நாட்களுக்கு பயன்படுத்த வழிவகுப்பதுடன், 22.5W வேகமான சார்ஜிங் வசதி இந்த பெரிய பற்றிரியை வேகமாக சார்ஜ் செய்ய உதவுகின்றது.

ஒவ்வொரு Huawei Y7a ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்யும் போதும், பயனர்கள் 5GB  இலவச Huawei Mobile கிளவுட் ஸ்டோரேஜைப் பெறுகிறார்கள், இது எதிர்கால அணுகலுக்கான கோப்புகள் மற்றும் தரவை சேமிக்க மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான வழியாகும்.

50GB, 200GB மற்றும் 2048GB போன்ற மாதாந்த மற்றும் வருடாந்த மேம்படுத்தல் திட்டங்களிலிருந்து தேவைகளின் அடிப்படையில் பயனர் கிளவுட் ஸ்டோரேஜினை மேம்படுத்த முடியும். வருடாந்த சந்தாக்கள் வழியாக கிளவுட் ஸ்டோரேஜினை மேம்படுத்துவோர் ஜூலை 31 வரை செல்லுபடியாகும் Huawei கிளவுட் ஸ்டோரேஜ் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதன் வெற்றியாளர்களுக்கு Huawei Nova 7 SE  ஸ்மார்ட்போன், ஐந்து Huawei Watch Fit சாதனங்கள் மற்றும் நான்கு Huawei Band 6 சாதனங்கள் பரிசாக வழங்கப்படும்.

Huawei Y7a இனை ரூபா 39,999/- என்ற விலைக்கு, Huawei experience centers, நாடு பூராகவும் உள்ள Singer காட்சியறைகள், Daraz.lk மற்றும் Singer.lk தளங்களிலும் கொள்வனவு செய்யலாம்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *