கட்டுபடியாகும் கட்டணத்தில் Study from Home திட்டங்களை வழங்கும் HUTCH

Author
Author

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மேலுமொரு புதிய முயற்சியாக மிகவும் கட்டுபடியாகும் விலையில் வீட்டிலிருந்து கற்கும் திட்டங்களை (Study from Home plans) அறிமுகப்படுத்தியுள்ளது.

கட்டுபடியாகும் தரவுத் திட்டங்களுக்கான சிறந்த  தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரான HUTCH , ஒன்லைன் ஊடான வகுப்புகள் மற்றும் விரிவுரைகளை அணுகுவதற்காக அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்க வாடிக்கையாளர்களின் சிக்கல்கள் தொடர்பில் தொடர்ந்து செவிமடுத்து வருகின்றது.

மிகவும் கட்டுபடியாகும் ரூபா 29 மற்றும் ரூபா 69 என்ற இரு கட்டணங்களில் வீட்டிலிருந்து கற்கும் திட்டங்களை HUTCH அறிமுகப்படுத்தியுள்ளது. Study from Home buddy திட்டம், ரூபா 29 என்ற கட்டணத்தில் 2GB தரவுடன் கிடைப்பதுடன், இது இரு நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூபா 69 buddy திட்டம், 7GB தரவுடன் வருவதுடன், இது 7 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த இரு திட்டங்களும் ZOOM, Microsoft Teams, Google Meet, Google Classroom அப்ளிகேஷன்களுக்கான அணுகலையும், web browsing வசதியையும் வழங்குகின்றன.

HUTCH ஏற்கனவே, ரூபா 551 இற்கு கிடைக்கும் 20GB டேட்டாவுடன் கூடிய 30 நாட்களுக்கான வேலை, கற்றல், Zoom டேட்டா திட்டங்களை, முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து கற்கும் திட்டங்களில் கிடைக்கும் அதே அப்ளிகேஷன்களுக்கான அணுகல்களுக்கு மேலதிகமாக, இந்த திட்டத்தின் மேலதிக நன்மையாக YouTube இற்கான எல்லையற்ற அணுகலையும் உள்ளடக்குகின்றது.

புதிய வீட்டிலிருந்து கற்கும் திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த, Hutch இன் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் ஹம்தி ஹசென்,“புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள் மாணவர்களுக்கு வீட்டில் வசதியாக இருந்து ஸ்மார்டாக கல்வி கற்க உதவும். இந்த வீட்டிலிருந்து கற்கும் திட்டங்கள், ஒன்லைன் வகுப்புகள் மற்றும் விரிவுரைகளுக்கு உதவும் வகையில் கட்டுபடியாகும் கட்டணத்தில் வழங்கப்படுவதுடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஸ்மார்ட் சாதனங்களுடன் விட்டுச் செல்லும் போதும் அது தொடர்பில் இனிமேலும் கவலைகொள்ளத் தேவையில்லை,” என்றார்.

இந்த திட்டங்கள் அனைத்தையும் அவற்றுக்குரிய தொகையை ரீலோட் செய்வதன் மூலமாகவோ, *131# என்ற USSD code இனை டயல் செய்வதன் மூலமாகவோ அல்லது SMS அனுப்பவதன் மூலமாகவோ செயற்படுத்திக்கொள்ள முடியும்.

HUTCH தொடர்பில்

Hutchison Telecommunications Lanka (Pvt) Limited, இலங்கையில் உள்ள முன்னணி 4G புரேட்பேண்ட் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரென்பதுடன், 1997 ஆம் ஆண்டு முதல் HUTCH என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது தற்போது நாடு தழுவிய 2G,3G  மற்றும் 4G வலையமைப்புகளை சிறந்த  தரவு  அனுவத்தை வழங்கும் பொருட்டு இயக்கி வருகின்றது. மொபைல் சந்தாதாரர்களின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்யும் புதுமையான மற்றும் கட்டுப்படியாகும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஸ்மார்ட் தொலைத்தொடர்பு வர்த்தகநாமகாக இந் நிறுவனம் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட பாரிய நிறுவனமான CK Hutchison Holdings Limited (CK Hutchison) இற்கு பெரும்பான்மையாகச் சொந்தமான துணை நிறுவனமே HUTCH ஆகும். உலகளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குவதுடன், 300,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இது கொண்டுள்ளது. CK Hutchison ஹொங்கொங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், இது டிசம்பர் 31, 2019 அன்று முடிவடைந்த ஆண்டில் சுமார் 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. Hutchison Asia Telecom மற்றும் CK Hutchison Holdings Limited தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.ckh.com.hk/en/global/home.php மற்றும் www.hutch.lk.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *