• Thu. Apr 25th, 2024

பிரத்தியேக குத்தகைத் தீர்வுகளை வழங்க DIMO மற்றும் NTB கைகோர்ப்பு

ByAuthor

Oct 12, 2020

இலங்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் ஜீப்பிற்கான (Jeep) அங்கீகரிக்கப்பட்ட ஏகபோக பொது விநியோகஸ்தரான DIMO, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவதற்கான தனது வலுவான உறுதிப்பாட்டை தொடர்ந்து காண்பித்து வருவதுடன், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (NTB) உடன் கைகோர்ப்பது குறித்த சமீபத்திய அறிவிப்புடன், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜீப் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, எளிதான, மேலும் கூடுதலான வாய்ப்பினைக் கொண்ட குத்தகை தெரிவுகளை வழங்க முன்வந்துள்ளது.

புத்தம் புதிய மற்றும் முன்பு வேறு ஒருவரின் உடமையாக இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் பயணிகள் கார்கள் மற்றும் வணிக வாகனங்கள் மற்றும் DIMO இனால் விற்கப்படும் ஜீப் SUV களுக்கும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி – DIMO குத்தகை ஊக்குவிப்பு கிடைக்கப்பெறுகிறது. இந்த பிரத்தியேக கூட்டாண்மை DIMO வின் பிரத்தியேக வாடிக்கையாளர்களுக்கு எளிதான குத்தகை முறைகள் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் அல்லது ஜீப் வாகனத்தை வாங்குவதற்கான பலவிதமான ஆடம்பரமான தெரிவுகளைப் பெற்றுக்கொள்ள உதவும். பலதரப்பட்ட, முன்பு வேறு ஒருவருக்கு சொந்தமான வாகனங்களை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்வதற்கும் ஒரு பரந்த தெரிவை வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை விரைவாக பெற்றுக்கொள்வதையும் எதிர்பார்க்கலாம். 2020 செப்டெம்பர் 22 ஆம் திகதி தொடங்கிய இந்த ஊக்குவிப்பு 2021 மார்ச் 31 வரை தொடரும்.

இந்த கூட்டாண்மை ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத் திட்டத்தை வழங்குவதுடன், மாற்றம் கண்டு வருகின்ற வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக, நெகிழ்வான கொடுப்பனவு முறைகளுக்கு இடமளிக்கின்றது. அதே நேரத்தில் குறைந்த தொகை கொண்ட மாதத் தவணைக் கொடுப்பனவால் வாடிக்கையாளர்களுக்கு நன்மையும் கிட்டுகின்றது. புத்தம் புதிய மற்றும் முன்பு வேறு ஒருவருக்குச்  சொந்தமான வாகனங்களுக்கான சிறப்பு வட்டி வீதங்கள் இதில் அடங்கியுள்ளதுடன், சமமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுத் தொகைகளுடன், மீதமுள்ள பெறுமதியில் 40% வரையான தொகையை ஐந்து ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்தில் இதனைக் கட்டமைக்க முடியும். மேலும், அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜீப் வாகனங்களுக்கும் நேஷன் டிரஸ்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக விலைகளையும் DIMO வழங்கும். DIMO சான்று அங்கீகாரத்துடனான ஒரு வருட முன் உடமை உத்தரவாதமும், ரூபா. 100,000/- வரையான தள்ளுபடியும் அனைத்து கொள்வனவுகளுக்கும் கிடைக்கப்பெறும். அத்துடன், உரிமையாளரின் பங்கு (5 ஆண்டுகள் வரை) மற்றும் 9.5% சிறப்பு வட்டி வீதத்துடன் தள்ளுபடியுடனான காப்புறுதித் திட்டமும் கிடைக்கப்பெறுகிறது.

DIMO வின் பொது முகாமையாளரான (மெர்சிடிஸ் பென்ஸ்) ரஜீவ் பண்டிதகே அவர்கள் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கனவு வாகனத்தை சிறந்த விலையிலும் குறைந்தபட்ச சிரமங்களுடனும் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்க புதிய வழிகளைத் தொடர்ந்தும் தேடல் செய்யும் வரலாற்றை DIMO கொண்டுள்ளது. எங்கள் மூலோபாய கூட்டாண்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட ஊக்குவிப்புக்கள் மூலம், இந்த விடயத்தில் நாங்கள் நிறைய வெற்றிகளை ஈட்டியுள்ளோம். நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியுடனான எங்கள் சமீபத்திய கூட்டாண்மை இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளதுடன், மேலும் சந்தையில் மிகக் குறைந்த கட்டணங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு மெர்சிடிஸ் பென்ஸ் அல்லது ஜீப் வாகனத்தை DIMO மூலம் கொள்வனவு செய்ய முடியும்,” என்று குறிப்பிட்டார்.

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் குத்தகைப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவரான பிரியந்த சமரதிவாகர கருத்துத் தெரிவிக்கையில், “DIMO போன்ற ஒரு உயர் ரக மோட்டார் வாகன நிறுவனத்துடன் நாங்கள் கூட்டாளர்களாக இருப்பது எமக்கு பெருமிதமளிக்கின்றது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பு மற்றும் வசதியை வழங்குவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம். மிக சமீபத்தில், இத்துறையை முற்றாக புரட்டிப்போட்ட நேஷன்ஸ் அதேயிட குத்தகைத் திட்டம் (Nations Onsite Leasing) முன்பு ஒரு போதும் கிடைத்திராத அளவில் குத்தகை நடைமுறையை இலகுபடுத்தியது. வாகன விற்பனை மையத்தில் வாடிக்கையாளர்கள் இப்போது குத்தகை செயல்முறையைத் தொடங்கலாம் என்பதுடன், ஏனைய அனைத்து விடயங்களையும் எங்கள் முகவர்கள் கவனித்துக்கொள்வார்கள். DIMO வுடனான இந்த கூட்டாண்மை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நெகிழ்வான மற்றும் வசதியான குத்தகை திட்டங்கள் மூலம் உயர் ரக வகுப்பு வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு கூட்டுப்பலம் மற்றும் நிபுணத்துவத்தின் அனுகூலத்தை சரியாக பயன்படுத்த இடமளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் 80 ஆண்டுகளாக ஆடம்பர வாகனங்களை விநியோகிக்கும் உயர் ரக நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DIMO, நேர்த்தியான சேவையின் விளைவாக நாடு முழுவதும் உள்ள வாகன ஆர்வலர்களுடன் ஈடுஇணையற்ற, மற்றும் நீண்டகால உறவைப் பேணி வளர்த்து வந்துள்ளது. இலங்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜீப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தராக, DIMO தொடர்ந்து வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களில் கவனம் செலுத்துவதில் தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதுடன், ஆழமாக கவனம் செலுத்துவதன் மூலம், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிரமங்களற்ற கொள்வனவு அனுபவம் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்கிறது. இது தவிர, விற்பனைக்கு பிந்தைய ஒப்பிட முடியாத சிறந்த சேவைகளையும் DIMO வழங்குகிறது. DIMO வால் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு 10,000 கி.மீ பயன்பாட்டின் பின்னரும் பேணற்சேவை பழுதுபார்ப்புகளைப் பெற்றுக்கொள்வதுடன், தொழிற்சாலை உத்தரவாதங்கள் மற்றும் ஒவ்வொரு பழுதுபார்ப்புக்கும் 1 ஆண்டு உத்தரவாதமும் கிடைக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜீப் வாகனங்களுக்கான நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி – DIMO குத்தகை ஊக்குவிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை எந்தவொரு நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி கிளையிலும் அல்லது மெர்சிடிஸ் பென்ஸ் மையமான ‘DIMO 800’ இனை 0772 44 9797 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டும் பெறலாம்.

முற்றும்

புகைப்பட தலைப்பு

DIMO மற்றும் NTB அதிகாரிகள் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்ளும் காட்சி

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *