• Thu. Apr 18th, 2024

பிளாஸ்டிக் சைக்கிள் 2021 – பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பற்றி நினைவுகூறல்

ByAuthor

Jul 6, 2021

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில்முனைவோர் திட்டமான பிளாஸ்க்டிசைக்கிள் ஜூன் 11, 2021 அன்று ´பிளாஸ்டிக் இது இப்போது அல்லது என்றென்றும்´ என்ற தலைப்பிலான பல பங்குதாரர்களைக் கொண்ட வெபினரை உலக சுற்றுச்சூழல் தினத்தின் நிமித்தமாக ´சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழித்தல் மற்றும் தணித்தல்´ என்ற கருப்பொருளில் நடத்தியது. பிளாஸ்டிக்சைக்கிளின் நிர்வாகி தலிதா பெரேரா தலைமை மதிப்பீட்டாளராக செயல்பட்ட குழுவில் ஆண்ட் டால்பி தலைமை நிர்வாக அதிகாரி சாஃப்ட்லோஜிக் சூப்பர் மார்க்கெட்டுகள் (பிரைவேட்) லிமிடெட் அமந்தி பெரேரா மாஸ் ஹோல்டிங்ஸில் மூலோபாய நிலைத்தன்மைக்கான துணை பொது மேலாளர் ரோஷன் நரசிங்ககே திட்ட மேலாளர் இலங்கை பல்லுயிர் பிரிவு (பி.எஸ்.எல்) மற்றும் முதித கட்டுவாவல ஒருங்கிணைப்பாளர் பேர்ல் புரெடெக்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் அமைப்புகளில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் விளைவுகள் மற்றும் விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பின் (ஈபிஆர்) கொள்கைக் கருவி அதானால் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கான நன்மைகள் ஆகியவற்றில் வெபினார் கவனம் செலுத்தியது. பெருங்கடல்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முற்படும் கடல் பாதுகாப்பு அமைப்பான தி பேர்ல் புரெடெக்டர்களின் ஆலோசனை முயற்சிகள்ரூபவ் பி.எஸ்.எல் வழங்கிய ஈ.பி.ஆர் ரோட்மேப் மேம்பாடுரூபவ் இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு கூட்டாண்மை துறையின் அர்ப்பணிப்புகளின் மூலம் இயங்கும் ஒரு தேசிய தளம் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பங்குதாரர் குழுவினராலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்த கலந்தாலோசனை கோடிட்டு காட்டியது.

சுழற்சி பொருளாதார கொள்கைகளுக்கு பங்களிப்பாளர்களாக மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் குளோமார்க் பல்பொருள் அங்காடிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு உறுப்பினர்கள் இருவரும் அந்தந்த அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் தங்கள் நிறுவனங்கள் சமூகங்கள் மற்றும் தொழில்களுக்குள் உள்ள பிளாஸ்டிக் தடம் குறைக்க கடக்கும் சவால்களைப் பற்றி கூறினார்கள்.

ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் மீதான வரம்புகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தி, தி பேர்ல் புரெடெக்டர்ஸின் ஒருங்கிணைப்பாளர் முதித கட்டுவாவல, ´ஒவ்வொரு ஆண்டும் 12.7 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கடலுக்குள் நுழைகிறது மற்றும் 50% க்கும் மேற்பட்ட கடல் குப்பைகள் மனித செயல்பாடுகளால் தூண்டப்பட்ட பயன்படுத்துதல் மற்றும் அப்புறப்படுத்துதல் என்ற கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கால் ஆனது´ எனக் கூறினார்.

ஈபிஆர் எனும் தலைப்பைக் குறித்து பிஎஸ்எல் நிகழ் மேலாளர் ரோஷன் நரசிங்ககே மேலும் கூறுகையில், ´நோர்வே போன்ற நாடுகளில் ஈபிஆர் வெற்றிகரமாக இருந்தபோதிலும் சந்தைகளில் நுழையும் 97% பிளாஸ்டிக் போத்தல்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன ஈபிஆர் தனியாக இலங்கையில் நுகர்வோர் பிளாஸ்டிக் கழிவு பிரச்சினையை தீர்க்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.´ முன்மொழியப்பட்ட வியூகத்தின் ஒரு முக்கிய அங்கம் இலங்கைக்கான கட்டாய அறிக்கை மற்றும் சேகரிப்பு – பின் மாதிரி ஆகும்ரூபவ் இது ஆரம்பத்தில் PET மற்றும் HIPS பிளாஸ்டிக்குகளை இலக்காகக் கொண்டு சுற்றாடல் அமைச்சு சுற்றாடல் அதிகார சபை இலங்கை வர்த்தக சபை மற்றும் இலங்கை பல்லுயிர் பிரிவு மற்றும் வணிக அளவில் பிளாஸ்டிக் பொதிகட்டுதலுக்கான மாற்று வழிகளை உருவாக்குவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் கூட்டுமேலாண்மை துறையின் பங்களிப்புகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியை நிறுவுவது உட்பட பல திட்டங்களைக் கொண்டுள்ளது.´

நுகர்வுக்குப் பிந்தைய கழிவு பிளாஸ்டிக்கின் தவறான மேலாண்மை குறித்த பிரச்சினையில் சில்லறை விற்பனையாளர்களின் பங்கைக் குறித்து சாஃப்ட்லோஜிக் பல்பொருள் அங்காடிகளின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ டால்பி கூறுகையில், ´சில்லறை விற்பனைத் தொழில்கள் பிளாஸ்டிக் பைகள் மீது கட்டணத்தை அமல்படுத்துவதில் செயல்பட்டு வருகிறது இது ஆரம்பத்தில் பல்பொருள் அங்காடி சங்கிலிகளில் உள்ள சில்லறைத் தொழில் விற்பனைகளில் செயல்படுத்தப்படும். எவ்வாறாயினும் அடிப்படை உரிமைகள் சட்டத்தின்படி சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் வெளியேறும் கவுண்டர்களில் இலவச பிளாஸ்டிக் பைகளை வழங்குவதற்கான சட்டத்திற்கு கட்டுப்பட்டுள்ளனர் இது எங்கள் வாடிக்கையாளர்களையும் நிறுவனத்தின் பிளாஸ்டிக் தடத்தையும் குறைக்க குளோமார்க்கினால் எடுக்கப்பட்ட பல முயற்சிகளுக்கு எதிர்மறையானது என்பதை நிரூபித்துள்ளது.´

சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றுடன் பிளாஸ்டிக்சைக்கிள் சில்லறை விற்பனை நிலையங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மீது பெயரளவில் கட்டணம் வசூலிக்க ஒரு கட்டமைப்பின் திட்டத்தை சுற்றாடல் அமைச்சிற்கு சமர்ப்பித்துள்ளது. அமைச்சின் ஒப்புதலின் பேரில் முன்மொழியப்பட்ட கட்டமைப்பை பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலிகளிடையே உருவாக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட அனைத்து நிதிகளும் முன்மொழியப்பட்ட பிளாஸ்டிக் பை கட்டணத்தை செயல்படுத்தும் சில்லறை விற்பனையாளர்களிடையே மேலும் சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.

எம்.ஏ.எஸ் ஹோல்டிங்ஸின் மூலோபாய நிலைத்தன்மைக்கான துணை பொது மேலாளர் அமந்தி பெரரா சுழற்சி நடைமுறைகளின் அவசியத்தை மேலும் வலியுறுத்தி கூறியதாவது ´எங்கள் உள்வாரியான பிளாஸ்டிக் தடம் குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மூலப்பொருட்களை உருவாக்குதல் ஆகியவை எங்கள் வணிகங்களால் ஏற்படும் மாசை தணிப்பதில் நாம் எடுத்துள்ள பல படிகளில் சிலவாகும். எவ்வாறாயினும் வெட்டு மேசையிலிருந்து கழிவுகள் மற்றும் நுகர்வுக்குப் பிந்தைய ஆடை மற்றும் பொருள் ஆகியவை எங்கள் உற்பத்தி செயல்முறையை ஒரு முக்கியமான அளவில் மீண்டும் சேர்க்கும்போது மட்டுமே முழுமையான சுழற்சியை அடைய முடியும். நாங்கள் இதை அடையும் வரை எங்கள் பிராண்டுகள் விநியோக சங்கிலி பங்காளிகள் மற்றும் நுகர்வோர் ஆகியோருடன் தற்போதைய அமைப்பில் உள்ள சவால்களின் மூலம் தொடர்ந்து பணியாற்றுவோம்.´

2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிளாஸ்டிக்சைக்கிள் இலங்கை மறுசுழற்சி சங்கம் (எஸ்.எல்.ஆர்.ஏ) மற்றும் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து நுகர்வுக்குப் பிந்தைய பிளாஸ்டிக்குகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை உலகளாவிய துணி உற்பத்தியாளர்கள் தமது கருவிகள் மற்றும் நூலிழை என்பவற்றை சுத்தப்படுத்த பயன்படுத்தும் பிளாஸ்டிக் உள்ளடக்கிய மோனோஃபிலமென்ட்கள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது.

பிளாஸ்டிசைக்கிள் தொடர்ந்து ´மறுத்தல் குறைத்தல் மீளப்பயன்படுத்தல் மற்றும் மீள்சுழற்சி என 4R களை ஊக்குவிக்கிறது. அவை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்த அறிவுபூர்வமாக பாவனை பொறுப்பான அகற்றலை ஆதரித்தல் மற்றும் மீள்சுழற்சி முயற்சிகளை ஊக்குவித்தல் என மூன்று முக்கிய தூண்களை மையமாகக் கொண்டது. இந்த திட்டம் இன்றுவரை 76 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பொறுப்பான அகற்றலுக்கு அனுப்பியுள்ளது. இதைக் குறித்து நேரடியாக ஒளிபரப்பப்பட் மெய்நிகர் நிகழ்வை இப்போது பிளாஸ்டிக்சைக்கிளின் முகநூல் பக்கம் வழியாக அணுகலாம்.

பிளாஸ்டிக்சைக்கிள் என்பது கொழும்பு பங்குச் சந்தையில் இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட 7 வௌவேறு தொழில் துறைகளில் 70 நிறுவனங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (பி.எல்.சி) இன் சமூக தொழில்முனைவோர் திட்டமாகும் மேலும் 2020 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் குழுமம் 150 ஆண்டுகளை வணிகத்தில் கொண்டாடியது. இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஜே.கே.எச் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது மற்றும் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம் என்று எல்.எம்.டி. இதழால் தரவரிசையிடப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும் ஐ.நா. குளோபல் காம்பாக்ட் உறுப்பினராகவும் இருக்கும் வேளையில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும் சமூக தொழில்முனைவோர் முன்முயற்சியான பிளாஸ்டிக்சைக்கிள் மூலமாகவும் ´நாளைக்கு நாட்டை மேம்படுத்துதல்´ என்பதில் தனது பார்வையை செலுத்துவதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை விஞ்ஞான ரீதியாக குறைப்பதில் ஒரு வினையூக்கியாக உள்ளது.

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *