ாணவர் நலக் கவனிப்பும் நல்வழிகாட்டலுக்குமான முக்கியத்துவம்: Lancaster University மற்றும் Study Group இன் பார்வை

Author
Author

இங்கிலாந்தானது உலகின் முன்னணி கல்வி மையமாக திகழ்கின்றது. இளைஞர்கள் முதல்  நடுத்தர வயதான பட்டதாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடருகின்றனர். நாட்டின் கல்வி மேன்மைக்கு மேலதிகமாக, இலங்கை மாணவர்கள் இங்கிலாந்தின் மிகவும் வரவேற்கத்தக்க, பன்முக கலாச்சார மற்றும் துடிப்பான சமுதாயத்தை விரும்புவதுடன், இப்போது, ​​நாட்டின் திறமையான COVID-19 தடுப்பூசி வழங்கலையும் அவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஒரு முன்னணி சர்வதேச உயர் கல்வி வழிகாட்டியான Study Group, இலங்கை மாணவர்கள் இங்கிலாந்தில்  கல்வி கற்க தெரிவு செய்ததற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன், அம் மாணவர்கள் நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். தொற்றுநோய் மற்றும் மாணவர் நலக் கவனிப்பும் நல்வழிகாட்டலும் தடைப்பட்டுள்ளமை காரணமாக பல சர்வதேச மாணவர்களின் உள ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது, உள ஆரோக்கியத்தைப் பற்றிய பல்வேறு கலாசார புரிதல்களுடன் இணைந்து, சர்வதேச மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியகங்களிலிருந்து அர்ப்பணிப்பு மிக்க ஆதரவைப் பெறுகிறார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பது முக்கியமாகும்.

Dr Mark Cunnington, Chief Operating Officer for the UK and EU at Study Group, கருத்து தெரிவிக்கையில்,”இங்கிலாந்தின்  வரலாற்றில் ஒரு முக்கியமான நேரத்தில், உலகின் முன்னணி தடுப்பூசி திட்டத்தின் விளைவாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னேறி வரும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களிடையே முன்னெப்போதையும் விட பிரபலமாக இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். UCAS படி, பிரித்தானிய பல்கலைக்கழகங்களுக்கான இலங்கை மாணவர் விண்ணப்பங்கள் கடந்த சில ஆண்டுகளில் முன்னரில்லாத வகையில் உயர்ந்துள்ளன. இந்த மாணவர்களை நாங்கள் எமது நாட்டிற்கு வரவேற்கும்போது, ​​அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதை உறுதிசெய்வது நமது கடமையாகும், இதனால் அவர்கள் பல்கலைக்கழக வாழ்க்கையிலிருந்து அதிகம் பெறமுடியும்.

இலங்கையின் சிறந்த மற்றும் பிரகாசமான மாணவர்களை தொடர்ந்து ஈர்ப்பதற்கு, இங்கிலாந்து வலுவான கல்வி வழங்கல் மற்றும் மிக முக்கியமாக அரசாங்க மற்றும் நிறுவன மட்டத்தில் மாணவர் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

உலகத் தரம் வாய்ந்த கல்விக்கான நாடாக தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமானால் இலங்கை மாணவர்கள் நன்கு ஆதரிக்கப்பட வேண்டும் என்ற புரிதலை அரசாங்கத்தின் அண்மைய சர்வதேச கல்வி மூலோபாயம் தெளிவாக நிரூபிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட மூலோபாயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முயற்சிகள், இலங்கை மாணவர்கள் இங்கிலாந்திற்கு வந்த தருணத்திலிருந்து அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தி, பிரித்தானிய பல்கலைக்கழக வாழ்க்கையில் முழுமையாக ஒருங்கிணைக்க முடியும் என்பதை உறுதி செய்யும். அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் உள்ள தடைகளை நீக்கி, அவர்களின் தொடர்ச்சியான நல்வாழ்வை உறுதி செய்வதன் மூலம் ஒரு தசாப்தத்திற்குள் கல்வி ஏற்றுமதியை 75 சதவீதம் உயர்த்துவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Study Group இல் மாணவர்களின் நலனே என்றும் எமது முக்கிய கரிசனையாக இருந்துள்ளது. நாங்கள் இணைந்து செயற்படும் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கல்வி மற்றும் உதவிக்காக ஒரு பிரத்தியேக நலன்புரி அதிகாரிக்கான அணுகலை பெற்றுக்கொள்ள முடியும். மாணவர்கள் முன்பின் அறிமுகமில்லாத சூழலுக்குள் தம்மை இணைத்துக்கொள்ளும் போது அவர்களுக்கு உதவ மாணவர்களின் நண்பர்களின் திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்துகிறோம், மேலும் மன மற்றும் உடல் நலனை மேம்படுத்துவதற்காக வழக்கமான இணைப்பாடவிதான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்,” என்றார்.

Study Groupஇன் மதிப்புமிக்க பங்காளர் நிறுவகங்களில் Lancaster University உம் ஒன்றாகும், இதுவொரு சிறந்த பிரித்தானிய பல்கலைகழகம் ஆகும். இது The Times மற்றும் The Sunday Times  Good University Guide 2020 ஆகியவற்றால் ஆண்டின் சர்வதேச பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டது. இலங்கை மாணவர்களுக்கு விரும்பத்தக்க சர்வதேச கல்வி இலக்காக இங்கிலான்தை மாற்றுவதற்கு Lancaster தனது பங்கை வகித்து வருகின்றது.

Tom Buckley, International Director and Principal of Cartmel College at Lancaster University in the UK, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “Lancaster University இல், ஒரு ஆதரவான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இலங்கையிலிருந்து வரும் மாணவர்கள் முன்னேற உதவுகிறது என்பதை நாங்கள் பாராட்டுகிறோம். எங்கள் கல்லூரி அமைப்பு ஒரு நிலையான பல்கலைக்கழக வழங்கலுக்கு அப்பால் ஒரு  பிணைப்புடன் கூடிய ஆதரவை வழங்குகிறது. கல்லூரிகளில் உள்ள எங்கள் மாணவ தலைவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் உலகெங்கிலும் உள்ள தங்கள் சகாக்களுக்கு ஆதரவளிப்பதில் தங்கள் முயற்சிகளை எவ்வாறு மையப்படுத்தியுள்ளனர் என்பதையும், அடுத்த கல்வியாண்டிற்கான அர்த்தமுள்ள வரவேற்புக்கான திட்டங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளதையும் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார்.

இந்த ISC ஒரு பிரத்தியேக நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரியைக் கொண்டுள்ளது, அவர் அனைத்து மாணவர்களின் நல்வாழ்வு தொடர்பான விடயங்களுக்குமென நியமிக்கப்பட்டுள்ளதுடன்,  ISC மற்றும்பல்கலைக்கழகத்திற்கு இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறார். பல்கலைக்கழகத்திற்கு வெளியில் சிகிச்சை அமர்வுகள் உட்பட பலவிதமான மனநல பிரச்சினைகள் குறித்த எங்கள் மெய்நிகர் சேவை மூலம் எளிதில் கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டிருப்பதுடன், பொருத்தமான மாணவர்களை ஆலோசனை சேவைகளுக்கு பரிந்துரைக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறோம். மேலும், பரீட்சை தொடர்பான பதற்றம் மற்றும் கல்வி இலக்குகளை அடைவதற்கான நுட்பங்கள் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட அமர்வுகளை ஆண்டு முழுவதும்  நாங்கள் நடாத்துகின்றோம்.

அனைத்துக்கும் மேலாக எங்கள் மாணவர்களின் நல்வாழ்வுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எங்கள் தற்போதைய ஏற்பாடானது எப்போதும் பேசுவதற்கு யாரோ ஒருவர் இருப்பதையும், எப்போதும் உதவி கிடைக்கும் என்பதையும் மாணவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது,” என்றார்.

Study Group மற்றும் Lancaster University போன்ற உலகளாவிய எண்ணம் கொண்ட உயர்கல்வி வழங்குநர்களால் நிரூபிக்கப்பட்ட ஆதரவு அணுகுமுறையுடன், முன்னெப்போதையும் விட அதிகமான இலங்கை மாணவர்கள் இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *