COVID-19 தொற்றுநோய் காரணமாக பரிந்துரைகள் ஓகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
- ஒன்லைன் பதிவுகளுக்கான சமர்ப்பிப்புக்கள் வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2020 வரை திறந்திருக்கும்
- விருதுகள் இரவுக்கு முன்னரும் பின்னரும் முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன
தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, PropertyGuru Asia Property Awards இன் ஏற்பாட்டாளர்கள் இந்த black-tie gala dinner மற்றும் விருது வழங்கும் நிகழ்வை ஒத்திவைக்கும் பொறுப்பு வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, இந்த நிகழ்வு முன்னதாக நடைபெறவிருந்த ஜூலை 17 இற்கு பதிலாக 2020 நவம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவில் உள்ள சிறந்த டெவலப்பர்கள் மற்றும் திட்டங்களை கௌரவிக்கும், மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் இந்நிகழ்வு கொழும்பு ஷங்ரில்லாவில் நடைபெறவுள்ளது. ஹோட்டல் முகாமைத்துவமானது வெப்பநிலை பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதியையும் வழங்கும். மேலும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் முகக்கவச பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், gala இரவு வரையும், நிகழ்வு தினத்தன்றும், ஏனைய முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தும்.
தற்போதுள்ள பதிவுகள் வழக்கம் போல் நிறுவப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும் இந்த ஒத்திவைப்பானது பரிந்துரைக்கான காலப்பகுதியை ஓகஸ்ட் 14 ஆம் திகதி வரை நீட்டிக்கின்றது. பொதுமக்கள் தமது பரிந்துரைகளை https://www.asiapropertyawards.com/en/nominations/ என்ற இணைப்பின் ஊடாக சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
2020 ஆம் ஆண்டு நிகழ்வின் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தினங்கள் வருமாறு:
14 ஓகஸ்ட் 2020 – பரிந்துரைகள் நிறைவு
21 ஓகஸ்ட் 2020 – பதிவுகள் நிறைவு
31 ஓகஸ்ட் – 11 செப்டம்பர் 2020 – தள ஆய்வு
11 அல்லது 14 செப்டம்பர் 2020 – இறுதித் தீர்மானம்
6 நவம்பர் 2020 – Gala Dinner மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இலங்கையின் கொழும்பில்
20 நவம்பர் 2020 – மாபெரும் இறுதி Grand Final Gala Dinner மற்றும் நிகழ்வு தாய்லாந்தின் பாங்கொக்கில்
PropertyGuru Asia Property Awards (இலங்கை) இற்கு பின்னால் உள்ள குழு விழிப்புடன் இருப்பதோடு, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் இலங்கை பொது அதிகாரிகளிடமிருந்தான பரிந்துரைகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கும்.
PropertyGuru Asia Property Awards இன், முகாமைத்துவ பணிப்பாளர் ஜூல்ஸ் கய், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், தேவை ஏற்படும் பட்சத்தில், மேலதிக சுகாதார நடவடிக்கைகள் முன்னோக்கிச் செல்லும் போது அறிமுகப்படுத்தப்படலாம்,” என்றார்.
மேலதிக விபரங்களுக்கு, மின்னஞ்சல் [email protected] அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளம் : AsiaPropertyAwards.com.
முற்றும்