AG GLASS வடிவமைப்பு உடன் கூடிய மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் முன்னணி EYE AUTOFOCUS அம்சத்துடன் சந்தைக்கு வரவுள்ள VIVO V20

Author
Author

நாளாந்தம் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டோருக்கான மகிழ்ச்சிக்குரிய தகவல் என்னவெனில், vivo V20 இன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளமையாகும்.

இதன் பிரகாரம், இத்துறையின் முன்னணி கெமரா அம்சங்கள் மற்றும் உயர்மட்ட அதி நேர்த்தியான AG Glass தொழில்நுட்பத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதுவரை வெளியான படங்கள் மற்றும் விபரங்களின் பிரகாரம், vivo நாட்டின் இளைஞர்களை மையமாகக் கொண்ட பிரதான வர்த்தகநாமமாக அதன் பாரம்பரியத்தை இதன் மூலமும் தொடர்கின்றது. V20 ஊடாக, நாடு முழுவதும் உள்ள செல்பி மற்றும் புகைப்பட பிரியர்களையும் கவரும் வகையில் கெமரா மற்றும் வடிவமைப்பு புத்தாக்கத்தில் புதிய பரிமாணத்தை vivo அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்துள்ள தகவல்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்வோம்:

V20- புகைப்படவியலாளர்களுக்கான குதூகலம்!

vivo V20 புதுமையான கெமரா நுட்பங்களுடன் சந்தைக்கு வரவுள்ளதாகவும், உங்களுக்குள் உள்ள புகைப்படவியலாளரை ஊக்குவிப்பதற்காக புத்தம் புதிய Eye Autofocus அம்சத்தையும் அறிமுகப்படுத்துவதாகவும் தகவல் பரவியுள்ளது. மேலும், V20 ஸ்மார்ட் புகைப்படவியலின் போக்கினை மாற்றுமென கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவேகமான Eye Autofocus அம்சமானது உங்கள் கண்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும் அதனை சரியாக பின் தொடர்ந்து மிகவும் துள்ளியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கக்கூடியது. மேலும் மிகவும் தொலைவில் இருப்பவற்றையும் நிறங்களின் செழுமையுடன் மற்றும் ஆழத்துடன் படமெடுக்கும். வழக்கமான ஸ்மார்ட்போன்களில் fixed focus அம்சம் உள்ளது ஆனால், vivoவின் அறிவார்ந்த Eye Autofocus அம்சம் புகைப்படவியலில் பல புதிய அம்சங்களை சாத்தியப்படுத்தவுள்ளது. இதில் இருந்து நாம் என்ன கூற முடியுமெனின் தெளிவற்ற செல்பி, படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு விடைகொடுக்கும் நேரம் நெருங்கி விட்டது என்பதாகும். சக்திவாய்ந்த மற்றும் விவேகமான Eye Autofocus அம்சத்துடன் கூடிய V20 இளம் உருவாக்குநர்கள் மற்றும் நிபுணர்களுக்கான முன்பக்க மற்றும் பின்புற புகைப்படவியலை மீள் வரையறை செய்வதாகவும், அவர்களுக்கு ‘Be the Focus’ ஆக இருப்பதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உருவாக்குவதற்கும் ஈர்ப்பதற்குமான வடிவமைப்பு

vivo, இளைஞர்களை வலுவூட்டும் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் வாக்குறுதிக்கு ஏற்ப செயற்படும் வரலாற்றை தன்னகத்தே கொண்டது. அதன் வாக்குறுதிக்கு உண்மையாக, vivo V20 ஆனது மிக மெல்லிய வடிவமைப்புடன் நேர்த்தியான தொழில்நுட்பத்தைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த AG Glass தொழில்நுட்பமானது போனின் மேற்பரப்பை கீறல்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதுடன், இந்த உறுதியான ஸ்மார்ட்போனுக்கு பளபளப்பான நன்கு மெருகேற்றப்பட்ட நேர்த்தியான தோற்றத்தை வழங்குகின்றது.

பின் பக்க உறையானது முதற்தர தோற்றம் கொண்ட V20 ஸ்மார்ட்போனுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. இது போனை இலகுவாக பிடித்து வைத்திருக்க ஏற்றதாக காணப்படுவதுடன், கைரேகை பதிவாகுவதையும் தடுக்கின்றது. இதன் AG Matte Glass ஆனது வியக்கவைக்கும் பின்புற கெமரா அமைப்பால் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளதுடன், இது ஸ்மார்ட்போனின் தோற்றத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகின்றது.

V20 வியக்கவைக்கும் Dual Tone Step கெமரா வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு ஒரு தனித்துவமான அழகை வழங்குவதுடன், அதன் நேர்த்தியான வடிவமைப்பை பூர்த்தி செய்கிறது. மேலும், இந்த சாதனம் இலகுவான நிறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

V20 என்பது நவநாகரீக மெலிதான வடிவமைப்பு மற்றும் இயற்கையின் அழகினால் ஈர்க்கப்பட்ட வண்ணங்களுடன் கூடிய எளிமையான கைவண்ணமாகத் திகழ்கின்றது. தகவல் மூலங்களின் பிரகாரம், V20 இரு வண்ணங்களில் கிடைக்கவுள்ளது, மிட்நைட் ஜாஸ் (Midnight Jazz) – தனித்துவ வண்ணமான இது மர்மமான மற்றும் ஆற்றல் நிறைந்தது, சன்செட் மெலடி (Sunset Melody), இது சூரிய அஸ்தமனம் மற்றும் கடற்கரைகளை நினைவூட்டும்.

இந்த புதிய சாதனமானது முதற்தர ஸ்மார்ட்போன் பிரிவில் நவீன பாணி மற்றும் புத்தாக்கத்தின் உச்சமாகவும் திகழுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

V20 தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். இந்த போன் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், Eye Autofocus மற்றும் மிரள வைக்கும் அசத்தலான வடிவமைப்பானது V20 இன் வியக்கத்தக்க அம்சங்களாக உள்ளன. இது காத்திருப்பதற்கான பெறுமதியை வழங்குகின்றன. இத் தருணத்தில், vivoவின் முதற்தர V வரிசையில் அடுத்து வரும் ஸ்மார்ட்போனான V20 மிகவும் எதிர்ப்பார்ப்புக்குரிய சாதனமாக உள்ளது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *