#BondWithHutch TikTok கொவிட் பாதுகாப்பு சவால் 7 நாட்களில் 3 மில்லியன் பார்வைகளை ஈட்டியது

Author
Author

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் வழங்குனராகத் திகழும் HUTCH, இளைஞர்களை முக்கியமான தொற்றுநோய் பாதுகாப்பு நடைமுறைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு TikTok தளத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது.

நாட்டில் கொவிட் 19 இன் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கூடிய இந்த புதுமையான பிரசாரத்தை முதன் முறையாக முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு TikTok இல் உள்ள புதுமையான “சவால்” (Challenge) அம்சத்தை  #BondWithHutch என்ற டெக்குடன் Hutch பயன்படுத்தியது. இதில் துடிப்பான செல்வாக்கு செலுத்துபவர்களின் (influencers) பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த பிரசாரம், COVID19 பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.

Hutch TikTok சவால் விரைவாக வைரலாகியதுடன், இதன் விளைவாக பல TikTok பாவனையாளர்கள் தங்கள் TikTok வீடியோக்களில் #BondWithHutch பாடலை உருவகப்படுத்தத் தொடங்கினர். #BondWithHutch சவால் 1 மில்லியன் பார்வைகளை எட்ட இரண்டு நாட்கள் மட்டுமே தேவைப்பட்டதென்பதுடன், அந்த மைல்கல்லை எட்டிய இலங்கையின் வேகமான வர்த்தகநாம பிரசாரமாக அது மாறியது. உண்மையில், இப்போது ஒரு வாரத்தில் 3 மில்லியனுக்கும் அதிக பார்வையை பெற்று சாதனை படைத்துள்ளதுடன், பிரசாரம் 500+ க்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பெற்றுள்ளது.

#BondWithHutch பாடல் இந்த TikTok சவாலுக்காக விசேடமாக உருவாக்கப்பட்டதுடன், இது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் (முகமூடிகளை அணிவது, கைகளை கழுவுதல் மற்றும் 1 மீட்டர் தூரத்தை பேணுவது போன்றவை) பொறுப்பான குடிமகனாக ஒருவரின் பங்கை ஆற்றுவது தொடர்பான அர்த்தமுள்ள செய்தியைக் கொண்டுள்ளது.

#BondWithHutch சவால் குறித்து, HUTCH இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, ரம்ஸீனா மொர்செத் லாய் கருத்து தெரிவிக்கையில், “இந்த சிறப்பு பிரசாரத்தின் மூலம், குறிப்பாக இளைஞர்களை எவ்வாறு அவர்களின் சொந்த பாதுகாப்பிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் செயற்படுவது என்பதில் Hutch ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்பியது. கொவிட் பாதுகாப்பு செய்தியை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், வீட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு புன்னகையையும் கொண்டு வர முடிந்தது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

Hutch நிறுவனத்தின் புதிய வர்த்தகநாம தூதுவர் காயத்ரி ஷான் மற்றும் பிரபல கலைஞர்கள் / நடிகைகளான ஷனுத்ரி பிரியசாத், தினாக்ஷி பிரியசாத், ஓஷதி ஹிமாஷா, தனாஷா ஹதரசிங்க, தில்கி உரேஷா, ஊடக பிரபலங்களான சச்னி நிபுன்சலா, தனு இன்னிசைத்தம்பி மற்றும் சமூக ஊடக நட்சத்திரங்களான ரமோத் மாலக்க, ஆதில் ஒஸ்மான், தேதுனு ஆகர்ஷனி, ஷைனி நெதிகுமாரா மற்றும் காவ்யா எரியாகம போன்றோரின் அற்புதமான ஆதரவுடன் #BondWithHutch சவால் மேலும் தீவிரமடைந்தது.

அவர்கள் தங்களது சொந்த தனித்துவமான TikTok வீடியோக்களுடன் விவரமான பாதுகாப்பு செய்திகளை உள்ளடக்கி #BondWithHutch சவாலை இலவசமாக விரிவுபடுத்தினர். இதன் பங்கேற்பாளர்கள் நினைவில் நிற்கக்கூடிய ராகத்துடன் கூடிய எளிதில் மறக்க முடியாத இந்த புதுமையான சவாலை மிகவும் பாராட்டினர். நாடு தழுவிய கொவிட் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக இளைஞர்கள் தங்கள் படைப்பு திறமைகளை எளிதில் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது.இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better”  சேவை வழங்க உதவியது. 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *