• Tue. May 11th, 2021

Spotify உடன் கைகோர்த்த HUTCH : உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சேவை தற்போது இலங்கையில்!

ByAuthor

Mar 4, 2021

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH , இலங்கை மொபைல் சந்தாதாரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கேட்டல் அனுபவத்தை வழங்கும்  பொருட்டு உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify உடன் கைகோர்த்துள்ளது.

Spotify  இலங்கையர்களுக்கு, 70 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பாடல்களைக் கேட்டு இரசிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இந்த Hutch-Spotify பங்குடமையானது Spotifyஇன் மிக நீண்ட இசைப்பட்டியலை ரூபா 579 (வரிகள் உள்ளடங்கலாக) என்ற மாதாந்த சந்தா தொகைக்கு கேட்டு மகிழும் வாய்ப்பினை இலங்கையர்களுக்கு வழங்கும். முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு HUTCH வாடிக்கையாளர்கள் Spotify Premium இற்கு subscribe செய்துகொள்ள முடியுமென்பதுடன், இந்த சந்தா சேவை பாவனையாளர்கள் தடையற்ற இசையை அனுபவித்து மகிழும் வசதியை வழங்கும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த  HUTCHஇன் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர்கள் ஹம்தி ஹசன், “உலகளாவிய ஓடியோ ஸ்ட்ரீமிங் சேவையை இலங்கைக்கு கொண்டு வரும் உடன் கைகோர்த்துள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எங்கள் நாடு பூராகவுமான  4G கவரேஜ் மற்றும் உகந்த தரவுகளுடன், ஹட்ச் தனது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் அல்லது டெபிட் அட்டையின் தேவையின்றி, ஹட்ச் இணைப்பு மூலம் கட்டணம் செலுத்துவதன் மூலம் ஸ்பாட்ஃபிக்கு இற்கான வசதியான அணுகலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது,” என்றார்.

HUTCH தொடர்பில்

Hutchison Telecommunications Lanka (Pvt) Limited, இலங்கையில் உள்ள முன்னணி 4G புரேட்பேண்ட் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரென்பதுடன், 1997 ஆம் ஆண்டு முதல் HUTCH என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது தற்போது நாடு தழுவிய 2G,3G  மற்றும் 4G வலையமைப்புகளை சிறந்த  தரவு  அனுவத்தை வழங்கும் பொருட்டு இயக்கி வருகின்றது. மொபைல் சந்தாதாரர்களின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்யும் புதுமையான மற்றும் கட்டுப்படியாகும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஸ்மார்ட் தொலைத்தொடர்பு வர்த்தகநாமகாக இந் நிறுவனம் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட பாரிய நிறுவனமான CK Hutchison Holdings Limited (CK Hutchison) இற்கு பெரும்பான்மையாகச் சொந்தமான துணை நிறுவனமே HUTCH ஆகும். உலகளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குவதுடன், 300,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இது கொண்டுள்ளது. CK Hutchison ஹொங்கொங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், இது டிசம்பர் 31, 2019 அன்று முடிவடைந்த ஆண்டில் சுமார் 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. Hutchison Asia Telecom மற்றும் CK Hutchison Holdings Limited தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.ckh.com.hk/en/global/home.php மற்றும் www.hutch.lk.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *